அரசு கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தப்பகுதி ஓட்டுச்சாவடிகளில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன்,

சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரியில் மூன்று கட்டடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ஓட்டுபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கல்லுாரி நுழைவு வாயில், உயர் கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமரா மூலமும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 40 போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Advertisement