இரு வேறு இடத்தில் அலுவலகங்கள் விவசாயிகள் அலைக்கழிப்பு

பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில் தென்னை, தக்காளி, வெங்காயம் எனப் பரவலாகச் சாகுபடி செய்யும் விவசாயிகள், அரசின் மானியத் திட்டங்களைப் பெற வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களைச் சார்ந்துள்ளனர். இந்நிலையில், இவ்விரு அலுவலகங்களும் வெவ்வேறு இடங்களில் செயல்படுவது விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது.

பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த பழைய கட்டடம் பழுதடைந்ததால், ஓராண்டுக்கு முன் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, வேளாண் அலுவலகம் மட்டும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், தோட்டக்கலைத் துறை அலுவலகம் இடவசதி இன்றி அதே பழைய ஆபத்தான கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது வடுகபாளையம் புதுார் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.



வேளாண் அலுவலகம் ஓரிடத்திலும், தோட்டக்கலை அலுவலகம் மற்றோர் இடத்திலும் இருப்பதால், சான்றிதழ்கள் மற்றும் மானியம் பெற விவசாயிகள் பல கிலோமீட்டர் அலைந்து திரிய வேண்டியுள்ளது. புதிய கட்டடம் கட்டி முடிக்கும் வரை, இவ்விரு அலுவலகங்களையும் ஒரே வாடகை கட்டடத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கை.

Advertisement