பாம்பன் பாலம் ஓரத்தில் முள்மரங்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் ஓரத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தில் குப்பையை அகற்றி சுகாதார பராமரிக்காமல் அலங்கோலமாய் கிடக்கிறது. இதனால் பாலத்தில் நின்று மன்னார் வளைகுடா தீவுகள், ரயில் பாலத்தை கண்டு ரசிக்கும் மக்கள் அருவருப்பு அடைகின்றனர்.

இந்நிலையில் பாம்பன் பாலம் நுழைவு ஓரத்தில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதன் பாலத்தின் பக்கவாட்டு கற்கள் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடர்ந்த முள் மரங்களுக்குள் பாம்புகள், விஷ ஜந்துகளின் புகலிடமாக உள்ளது. இந்த விஷ ஜந்துகள் மூலம் பாலத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முள் மரங்களை அகற்றி சுகாதாரம் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement