வறட்சிக்கு கருகும் வேப்பமரக் கிளைகள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வேப்ப மரக் கிளைகள் கருகி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பருவமழையின்றி, கோடை வெயில் சுட்டெரிப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலான வேப்ப மரத்தின் இலைகள் முதல் கிளைகள் வரை வெப்பத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகி வருகின்றன.
கோடை காலத்தில் நீர்ச்சத்து பற்றாக்குறை, வெப்பம் தாக்குதல் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில் வேப்ப மர இலைகள் கருகுவதற்கு அம்மை நோய் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமோ என மக்கள் தற்போது அச்சமடைகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
36 பந்தில் சதம் அடித்தார் சூர்யவன்ஷி; ராஜஸ்தான் 229 ரன் குவிப்பு
-
கொடைக்கானல் சென்றார் முதல்வர் ஸ்டாலின்
-
பிரதான சாலையில் வழிந்தோடும் குடிநீர் :கோடை காலத்தில் வீணாகும் அவலம்
-
இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்
-
சென்னையில் ஓட்டுப்பதிவு விபரம் வெளியீடு: 4.72 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை
-
20 ஆண்டுகளில் இம்முறைதான் மிக குறைந்த அளவில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
Advertisement
Advertisement