20 ஆண்டுகளில் இம்முறைதான் மிக குறைந்த அளவில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

சென்னை:கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த சட்டசபை தேர்தலில் மிக குறைந்த அளவே ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளது.

கடந்த 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், 85 சதவீதம் அதாவது, 4.88 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். சதவீத கணக்கில் பார்த்தால், இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஓட்டுப் பதிவாகும். இதை வைத்து, மக்கள் பெரும் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டதாக, அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

இதற்கு விஜயின் த.வெ.க., காரணமா அல்லது எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமா என்ற, விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் புள்ளிவிபரங்களை ஆராய்ந்தால், 2006ல் இருந்து, கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இம்முறை மிக குறைந்த அளவே ஓட்டு சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

தமிழகத்தில், 2001 சட்டசபை தேர்தலில், 2 கோடியே, 80 லட்சத்து, 48,077 ஓட்டுக்கள் பதிவாகின; அதை விட 2006ல், 15.02 சதவீதம் அதிகமாக, அதாவது 49 லட்சத்து 57,415 ஓட்டுக்கள் அதிகம் பதிவாகின.

பின், 2011ல் 10.21 சதவீதம் அதாவது, 37 லட்சத்து, 51,321 ஓட்டுக்கள் பதிவாகின. 2016ல், 14.36 சதவீதம் அதாவது, 61 லட்சத்து, 47,472 ஓட்டுக்கள் அதிகம் பதிவாகின. 2021ல் 7.21 சதவீதம், அதாவது 33 லட்சத்து 32,431 ஓட்டுகள் அதிகம் பதிவாகின.

ஆனால், கடந்த 2021ல் பதிவான 4 கோடி, 62 லட்சத்து, 36,716 ஓட்டுக்களோடு ஒப்பிடும்போது, இம்முறை 5 சதவீதம், அதாவது 5.50 சதவீதம் மட்டுமே, அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, மிக குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.



ஆண்டு பதிவான ஓட்டுக்கள் (கோடியில்) சதவீதம் அதிகரித்த ஓட்டுக்கள் (லட்சத்தில்) சதவீதம்



2001 2,80,48,077 59.07

2006 3,30,05,492 70.82 49,57,415 15.02

2011 3,67,56,813 78.01 37,51,321 10.21

2016 4,29,04,285 74.24 61,47,472 14.36

2021 4,62,36,716 73.63 33,32,431 7.21

2026 4,88,00,000 85.15 26,00,000 5.50

***

Advertisement