இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்
மடிப்பாக்கம்: மயிலாப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், பூந்தமல்லி சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நடத்துகின்றன.
இம்முகாம், மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம், அய்யப்பன் கோவில் மணிமண்டபத்தில் ஏப்ரல் 26 ல் நடக்கிறது.
காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்த முகாமில், தேர்வு செய்யப்படுவோருக்கு விழி 'லென்ஸ்' பொருத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை, போக்குவரத்து வசதி, தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசம்.
சிகிச்சை மேற்கொள்ள விரும்புவர் ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள் மருந்து, மருந்து சீட்டு எடுத்து வர வேண்டும்.
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயர் கண் சிகிச்சை பெறுபவர்களும் அணுகலாம். மேலும், விபரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர்களின், 93805 60592, 98419 78319, 98409 14613, 91761 59004 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.