36 பந்தில் சதம் அடித்தார் சூர்யவன்ஷி; ராஜஸ்தான் 229 ரன் குவிப்பு
ஜெய்ப்பூர்: ஹைதராபாத்துக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜூரேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜூரேல் அரைசதம் அடித்து 51 ரன்னில் அவுட்டானார்.
இளம் வீரர் சூர்யவன்ஷி, ஹைதராபாத் பவுலர்களை பந்தாடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 36 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பெரேரா (33) ஓரளவுக்கு ரன் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், பிரபுல் ஹிங்கே, கம்மின்ஸ், ஷகிப் ஹூசேன், நிதிஷ் ரெட்டி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.