சென்னையில் ஓட்டுப்பதிவு விபரம் வெளியீடு: 4.72 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை

சென்னை:சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், 4 லட்சத்து, 72,319 பேர் ஓட்டு போடாதது தெரிய வந்துள்ளது. பெண்களே அதிகம் ஓட்டு போட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில், 28 லட்சத்து, 93,505 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 74,089 பேர், 18 வயதை பூர்த்தியான புதிய வாக்காளர்கள்.

தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - த.வெ.க., என, நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதன்படி, 16 சட்டசபை தொகுதிகளில், 419 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இதற்கான ஓட்டுப்பதிவு 23ம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 28 லட்சத்து, 93,505 வாக்காளர்களில், 83.68 சதவீதமான, 24 லட்சத்து, 21,186 வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதில், பெண்களே அதிகம்.

தபால் ஓட்டுகள், 32,000 வரை பதிவாகி உள்ளன; இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை.

வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்குமுன், 2021 சட்டசபை தேர்தலில், 40 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், 24 லட்சத்து, 3,495 பேர் ஓட்டுபதிவு செய்தனர். இந்த தேர்தலில், சென்னையில்,17,691 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

அதேபோல், 2024 லோக்சபா தேர்தலில், 21 லட்சத்து, 80,593 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அவற்றை ஒப்பிடும்போது, 2 லட்சத்து, 40,593 ஓட்டுகள் குறைவு.

இந்த முறை சென்னை மாவட்டத்திலேயே அதிகமாக, ஆர்.கே.நகரில், 90.56 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஆனால், 2021 சட்டசபை தேர்தலின் பதிவானதை விட, 6,103 ஓட்டுக்கள் குறைவு.

அதேபோல், வில்லிவாக்கம், துறைமுகம், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில், கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில், 2021 சட்டசபை தேர்தலில் கணிசமாக மக்கள் ஓட்டளித்தனர். அதேநேரம், 2024 லோக்சபா தேர்தலில், 2.40 லட்சம் பேர் வரை ஓட்டளிக்கவில்லை.

தற்போது, மாவட்ட தேர்தல் ஆணையம், மெரினா கடற்கரை, மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. எவ்வித சிரமமின்றி வாக்காளர்கள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் வாயிலாக, கடந்த தேர்தலை விட ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



@block_B@ தொகுதிகள் வாரியாக ஓட்டுப்பதிவு ஒப்பீடு தொகுதிகள் - 2021 - சதவீதம் - 2024 - சதவீதம் - 2026 - சதவீதம் ஆர்.கே.நகர் - 1,86,636 - 70.97 - 1,62,387 - 66.81 - 1,80,533 - 90.56 பெரம்பூர் - 1,99,410 - 63.13 - 1,71,660 - 60.44 - 2,03,072 - 89.74 கொளத்துார் - 1,71,656 - 61.06 - 1,59,824 - 56.49 - 1,82,382 - 86.12 வில்லிவாக்கம் - 1,42,833 - 55.95 - 1,29,542 - 53.86 - 1,40,522 - 86.01 திரு.வி.க.நகர் - 1,32,971 - 60.61 - 1,21,651 - 56.11 - 1,42,864 - 78.66 எழும்பூர் - 1,18,118 - 61.16 - 1,08,930 - 56.93 - 1,18,726 - 85.55 ராயபுரம் - 1,20,605 - 62.61 - 1,09,863 - 57.02 - 1,26,346 - 79.14 துறைமுகம் - 1,01,306 - 57.64 - 92,827 - 53.18 - 99,141 - 82.53 சேப்பாக்கம், திருவல்லிக்கேணி - 1,36,506 - 58.33 - 1,26,596 - 54.12 - 1,39,923 - 84.28 ஆயிரம்விளக்கு - 1,35,275 - 56.35 - 1,22,743 - 52.16 - 1,30,366 - 82.76 அண்ணாநகர் - 1,63,926 - 57.31 - 1,47,976 - 53.90 - 1,61,751 - 85.65 விருகம்பாக்கம் - 1,67,934 - 57.31 - 1,51,267 - 54.00 - 1,71,507 - 85.51 சைதாப்பேட்டை - 1,59,993 - 57.35 - 1,43,726 - 53.36 - 1,58,930 - 77.85 தி.நகர் - 1,36,478 - 55.70 - 1,24,198 - 53.55 - 1,32,639 - 83.55 மயிலாப்பூர் - 1,53,200 - 56.63 - 1,38,920 - 52.65 - 1,49,277 - 74.84 வேளச்சேரி - 1,76,648 - 56.16 - 1,68,483 - 54.30 - 1,83,207 - 84.36 மொத்தம் - 24,03,495 - 59.24 - 21,80,593 - 55.55 - 24,21,186 - 83.68block_B

@block_B@ ஓட்டு போடதோர் ஆண்கள் ஓட்டுகள் - ஓட்டு போட்ட ஆண்கள் - ஓட்டு போடாத ஆண்கள் 13,95,716 - 11,72,568 - 2,23,148 பெண்கள் ஓட்டுகள் - ஓட்டு போட்ட பெண்கள் - ஓட்டு போடாத பெண்கள் 14,96,921 - 12,48,129 - 2,48,792 இதரர் ஓட்டுகள் - ஓட்டு போட்ட இதரர் - ஓட்டு போடாத இதரர் 868 - 489 - 379block_B

Advertisement