கொடைக்கானல் சென்றார் முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானல்:தமிழக முதல்வர் ஸ்டாலின், ஓய்வெடுப்பதற்காக நேற்று மதியம் தன் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக சென்னையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின், தன் குடும்பத்துடன், நேற்று காலை 10:00 மணிக்கு தனி விமானத்தில் மதுரை சென்றார். உடன், அவரது மனைவி துர்கா சென்றார். அவர்களை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
விமான நிலையத்தில், முதல்வர் ஸ்டாலினிடம், 'தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ஸ்டாலின் பதில் ஏதும் கூறாமல், வலது கை, கட்டை விரலை உயர்த்தி, 'தம்ஸ் அப்' சைகை காண்பித்துச் சென்றார்.
பின் காரில் புறப்பட்டு, மதியம் 3:00 மணிக்கு கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஸ்டாலின் சென்றார். முன்னதாக, மலை அடிவாரத்தில் இருந்து, தி.மு.க., தொண்டர்கள் ஆங்காங்கே உற்சாகமாக வரவேற்றனர். இதனால், ஆங்காங்கே காரை நிறுத்தி, வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளித்த பரிசு பொருட்களை வாங்கினார்.
வரும் 29ம் தேதி வரை, கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கிறார். எனவே, அவர் தங்கி உள்ள நட்சத்திர விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நேற்று காலை 6:00 மணி முதல், அவர் சென்னை திரும்பும் வரை, கொடைக்கானல் நகர் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனி விமானம், கார் எப்படி? affidavit ல இதை பற்றி எல்லாம் செல்லவே இல்லை? ஏன்னா உங்க டிசைன் அப்படி