அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல்: காவல் நிலையம் முற்றுகை
ஒரகடம்: ஒரகடம் அருகே, சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியதாக, அப்பகுதி மக்கள் ஒரகடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதன் ஒருபகுதியாக, ஒரகடம் அருகே எழிச்சூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்காளர்கள் ஓட்டுகளை செலுத்தினர்.
இந்த நிலையில், எழிச்சூர் பகுதியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை துணை செயலர் முரளிகிருஷ்ணன் ஓட்டுச்சாவடி அருகே கட்சியினருடன் நின்றிருந்தார்.
அப்போது, அங்குவந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், முரளி கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, முரளி கிருஷ்ணனை ஆகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரகடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தாக்குதல் நடத்திய ஆகாஷை கைது செய்ய வேண்டும் என, காவல் நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதல் நடத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்ததால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்