மேற்கு வங்கத்தின் விறுவிறு ஓட்டுப்பதிவுக்கு பாராட்டு! மகிழ்ச்சி அளிப்பதாக சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி : மேற்கு வங்க சட்டசபைக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 92.88 சதவீதம் ஓட்டுப்பதிவானது மகிழ்ச்சி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தலை ஒட்டி கடந்தாண்டு எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது.
இதன்முடிவில், இரட்டை குடியுரிமை, இறந்தவர்கள் என 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.66 கோடியில் இருந்து 12 சதவீதம் சரிந்து, 6.75 கோடியாக குறைந்தது.
தாக்குதல்
இந்நிலையில், அங்குள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக வரும் 29ம் தேதி 142 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த தேர்தலின்போது, வேட்பாளர்கள் மீது தாக்குதல், கல்வீச்சு சம்பவம் என ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 92.88 சதவீத அளவுக்கு ஓட்டுப்பதிவானது. நாடு சுதந்திரம் அடைந்த பின், மேற்கு வங்கத்தில் இந்த அளவுக்கு அதிகமாக ஓட்டுப்பதிவு நடந்தது இதுவே முதன்முறை.
இந்நிலையில், அதிக அளவில் ஓட்டுப்பதிவு நடந்தது குறித்து உச்ச நீதிமன்றம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வில், 'எஸ்.ஐ.ஆர்., பணியால் தங்களால் ஓட்டளிக்க முடியவில்லை' என கூறி 65 தேர்தல் அலுவலர்கள் உட்பட தனிப்பட்ட நபர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகை யில், ''மேற்கு வங்கத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
''நாட்டின் குடிமகனாக இதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஓட்டுரிமையை வாக்காளர்கள் சரியாக பயன்படுத்தினால், ஜனநாயகம் வலுவடையும்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி, ''ஓட்டுரிமையின் அதிகாரத்தை மக்கள் நன்கு உணர்ந்து விட்டால், அவர்கள் நிச்சயம் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்,'' என்றார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''மேற்கு வங்கத்தில் 92 சதவீத அளவுக்கு ஓட்டுப்பதிவு என்பது வரலாற்று சாதனை. ஒரு சில இடங்களை தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது,'' என்றார்.
ஆர்வம்
இதை குறித்துக் கொண்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ''மன்னர்கள் இடையே போர் நடந்தால், இங்கே உயிர் துறப்பது சாமானிய மக்கள் தான்,'' என கருத்து தெரிவித்தார்.
தேர்தல் கமிஷன் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த முறை ஆண்களை விட, பெண் வாக்காளர்களே அதிக அளவில் ஓட்டளித்தனர். ஆண் வாக்காளர்களின் ஓட்டு சதவீதம் 90.92 ஆகவும், பெண் வாக்காளர்களின் ஓட்டு சதவீதம் 92.69 சதவீதமாகவும் பதிவானது.
மூன்றாம் பாலினத்தவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். இதனால், அவர்களது ஓட்டு சதவீதமும் 56.79 என்ற அளவுக்கு பதிவானது.
இதே போல இன்னொரு கருத்து ..... மே 4க்கு பின் திரிணமுல் குண்டர்கள் தப்ப முடியாது.. அப்போ அரசியல் சட்டம், தண்டனைச் சட்டம், கோர்ட்டு இவையெல்லாம் எதுக்கு
SIR தான் இதற்கு காரணம்மேலும்
-
36 பந்தில் சதம் அடித்தார் சூர்யவன்ஷி; ராஜஸ்தான் 229 ரன் குவிப்பு
-
கொடைக்கானல் சென்றார் முதல்வர் ஸ்டாலின்
-
பிரதான சாலையில் வழிந்தோடும் குடிநீர் :கோடை காலத்தில் வீணாகும் அவலம்
-
இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்
-
சென்னையில் ஓட்டுப்பதிவு விபரம் வெளியீடு: 4.72 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை
-
20 ஆண்டுகளில் இம்முறைதான் மிக குறைந்த அளவில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு