தி.மு.க., வேட்பாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆலோசனை
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., வேட்பாளர்களுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, பெரம்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில், கட்சி நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை என, வேட்பாளர்கள் புகார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் வந்தார். அங்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க., வேட்பாளர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் ஓட்டுப்பதிவு தொடர்பாக, ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம், ஓட்டுப்பதிவு சதவீதம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அப்போது, சென்னை பெரம்பூர் தொகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகி ஒருவர் மீதும், வட்ட நிர்வாகிகள் மீதும், வேட்பாளர்கள் சரமாரியான புகார்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சென்னையில் த.வெ.க.,வுக்கு கிடைத்த ஓட்டுகளால், ஏழெட்டு தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற தகவல் பரவியது.
பெரம்பூரில் தி.மு.க., வேட்பாளர் சேகருக்கு, கட்சியினர் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை எனவும் கூறப்பட்டது. அத்தொகுதியில், ஏழு வார்டுகளில், 14 வட்ட செயலர்கள் உள்ளனர். அவர்களில் சிலர், ஓட்டுப்பதிவின்போது, 'டிமிக்கி' கொடுத்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி, அவரது உதவியாளர் செந்தில் நேரடி கண்காணிப்பில், இளைஞரணி மாநில நிர்வாகி ஜோயல் தலைமையில், 150 இளைஞர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
ஓட்டுப்பதிவையொட்டி, வெளியூர் ஆட்கள் என்பதால், ஜோயல் தலைமையிலான இளைஞர் படையினர் வெளியேறிய பின், தேர்தல் பணி மந்தமாகியுள்ளது. எனவே, பெரம்பூரில் தி.மு.க., வேட்பாளர் தோற்றால், நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்பது உறுதி.
துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சேகர்பாபு, த.வெ.க., வேட்பாளர் சினோரா அசோக் இடையே நடந்த மோதல் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து (7)
Barakat Ali - Medan,இந்தியா
25 ஏப்,2026 - 12:33 Report Abuse
சிக்கனம் செய்யாம, மிச்சம் புடிக்காம எல்லாத்தையும் சனங்களுக்கு வாரி உட்டீங்களா ???? ஆமாங்க சார் .... 0
0
Reply
Sun - ,
25 ஏப்,2026 - 10:42 Report Abuse
வழக்கமாக எல்லா கட்சிகளிலும் தேர்தலுக்கு முன்புதான் நேர்காணல். இங்கு தேர்தல் முடிந்தும் நேர் காணலா? தலைவரின் பயம், பதட்டம் இதிலிருந்தே நன்கு தெரிகிறது. 0
0
Reply
தேர்தல் விதி முறைகள் என்ன ஆனது? - ,
25 ஏப்,2026 - 08:15 Report Abuse
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னமும் அமலில் உள்ளன. இவ்வாறு செய்வது கிரிமினல் குற்றம். இவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
25 ஏப்,2026 - 06:49 Report Abuse
அதிகபட்சமாக பணத்தை திரும்ப கொடுக்கமாட்டோம் என்று சொல்லியிருப்பார். வேறு என்ன சொல்லிவிட முடியும்? 0
0
Reply
vijay - ,
25 ஏப்,2026 - 05:44 Report Abuse
தோல்வி பயம் தான்.. வேறு ஒன்றும் இல்லை 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
25 ஏப்,2026 - 04:44 Report Abuse
இரும்புக்கை கோப்பால்: "அடுத்து நாம் பதவிக்கு வர முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை. அதுனால ஈடி ரைடில் இருந்து தப்பிக்க கொள்ளையடித்ததை பக்காவாக பதுக்கி வைத்து விடுங்கள். பாருங்கள் நம் இளவரசர் பெத்தாச்சியை பார்த்து கோடை வெப்பத்தத்தை தனித்துக் கொண்டு முதலீடு செய்து வர துபாய் போகிறார்". 0
0
Barakat Ali - Medan,இந்தியா
25 ஏப்,2026 - 14:56Report Abuse
வெப்பம் தணிக்கவா ???? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement