நியூசிலாந்து அணி ஏமாற்றம் * முதல் 'டி-20' போட்டியில்

சாட்டோகிராம்: முதல் 'டி-20' போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டில் வங்கதேசத்திடம் தோல்விஅடைந்தது.
வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று சாட்டோகிராமில் நடந்தது. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு கிளார்க், ராபின்சன் (0) ஜோடி துவக்கம் தந்தது. கிளார்க் (51 ரன், 37 பந்து), கிளீவர் (28ல் 51 ரன்) என இருவரும் அரைசதம் அடித்து ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் நிக் கெல்லி 39 ரன் எடுத்தார். பின் வரிசையில் கிளர்க்சன் (27) கைகொடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 182/6 ரன் எடுத்தது.
வங்கதேச அணி 10.1 ஓவரில், 77/3 ரன் எடுத்து தவித்தது. தவ்ஹித், பர்வேஸ் (28) இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். தவ்ஹித் அரைசதம் அடித்தார்.
வங்கதேச அணி 18 ஓவரில் 183/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தவ்ஹித் (51), ஷமிம் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement