பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை

5

தஞ்சாவூர்: தன் மகளை கொலை செய்த வாலிபர் ஜாமினில் வந்திருப்பதை அறிந்த தந்தை, பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம், தஞ்சாவூரில் நடந்துள்ளது.


தஞ்சாவூர் அருகே பிராந்தை பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி,53. தி.மு.க., வை சேர்ந்த ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா,26, என்பவரை கடந்த 2025ம் ஆண்டு, அஜித்குமார் என்பவர் காதலிக்க மறுத்ததால் வெட்டிக் கொலை செய்தார்.

பிறகு ஜாமினில் சிறையில் இருந்து வந்த அஜித்குமாரை, புண்ணியமூர்த்தி பழிக்கு பழியாக வெட்டிக்கொலை செய்தார். புண்ணியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement