வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் ; துணை ஜனாதிபதி
ஜெய்ப்பூர்: இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், நாட்டை கட்டியெழுப்புபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ராஜஸ்தானில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் இன்று நடந்த ராஜஸ்தான் பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவர் சிறப்புரையாற்றியதாவது; இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், நாட்டை கட்டியெழுப்புபவர்களாகவும் இருக்க வேண்டும். கல்வி என்பது கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு சிறந்த செயல் என்பது முழுமையற்றதாகும். நற்பண்புகள், மன உறுதி மற்றும் கருணையுடன் வாழ்க்கையை வழிநடத்த வேண்டும். கல்வியில் பெண்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. ஓர் உண்மையான வளர்ந்த தேசத்திற்கு பெண்களுக்குச் சம வாய்ப்பு, கண்ணியம் மற்றும் தலைமைப் பொறுப்புகள் அவசியம், இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, பகவான் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 23வது புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழாவில் அவர் பேசியதாவது; நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியதன் மூலம் புற்றுநோய் தடுப்பில் அரசு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை மிக முக்கியமானவை. புற்றுநோய்க்கு எதிராக யாரும் தனித்துப் போராட வேண்டாம். புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் உண்மையான போர்வீரர்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் 75% புற்றுநோய் சிகிச்சைகள் கிராமப்புற மக்களுக்குப் பயனளிக்கின்றன, இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
வடமாநில தொழிலாளி நீர்வள்ளூரில் கொலை
-
8.68 லட்சம் பேர் வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளிப்பு :பிற வகை ஆவணங்களை பயன்படுத்திய 1.78 லட்சம் பேர்
-
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
-
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத பட்டாசு ஆலைகள்; விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்
-
ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலைக்கு அனுமதி பெறவில்லை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
-
மார்பு எலும்பு அகற்றப்பட்ட நோயாளிக்கு '3டி'யில் டைட்டானியம் பொருத்தி மறுவாழ்வு