108 பால் குடம் ஊர்வலம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 108 பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று பாலாபிேஷகம் செய்தனர்.

கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழாவையொட்டி, நேற்று காலை 108 பால் குடங்களை பக்தர்கள் சுமந்து செண்டை மேள, தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிேஷகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அம்மன் பூ பல்லக்கில் வீதியுலா நடந்தது.

Advertisement