பா.ஜ., கனவு திட்டங்களை தவிடு பொடியாக்க முதல்வர் ரங்கசாமி புதிய திட்டம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
பாஜ.,வின் துணை முதல்வர் கனவிற்கு ஷாக் கொடுக்க முதல்வர் ரங்கசாமி தயாராகி வரும் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்.,16, பா.ஜ., 10, அ.தி.மு.க., 2, ல.ஐ.க.,2, என 30 தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் வரும் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பா.ஜ., தலைமை, துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளை கைப்பற்ற பல்வேறு வியூகங்களுடன் காத்திருக்கிறது.
இதில், துணை முதல்வர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், சுயேச்சை மற்றும் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி முதல்வருக்கு அழுத்தம் கொடுப்பது, அல்லது தனித்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் விதத்தில் தேர்தல் நேரத்தில் வெற்றி வாய்ப்புள்ள என்.ஆர்.காங்., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவிற்கு பா.ஜ., சார்பில், கணிசமான தொகை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ., வின் இந்த திட்டங்களை கண்டறிந்துள்ள முதல்வர் ரங்கசாமி இதற்கு சரியான பதிலடி தரும் வகையில், அவரும் சில திட்டங்களை செயலாக்கம் செய்வதற்கு தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், முக்கியமாக துணை முதல்வர் பதவி என்பது ஒன்று வழங்கப்படாது.
மேலும் தான் எதிர்பார்க்கும் அளவிற்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவி. அதிலும் கடந்த முறை வழங்கப்பட்டது போல் அதிக அளவு பதவிகள் வழங்கப்படாது. இரண்டு அமைச்சர் என்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் தன்னுடன் சுமூக உடன்பாடுடன் செயல்படும் கவர்னர், அரசு செயலர்கள் புதிதாக நியமிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளைகளுடன் புதிய கூட்டணி அமைச்சரவை அமைக்க பேச்சுவார்த்தைக்கு வரும் பா.ஜ., வினரிடம் தெரிவிக்கவுள்ளார்.
இதற்கு ஒத்து வரவில்லை என்றால் தி.மு.க., த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது. இதிலும், தனக்குத் நெருக்கடி கொடுக்க பா.ஜ., தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.,க்களை வாங்கி தனித்து ஆட்சி அமைக்க முயன்றால், மொத்தமாக என்.ஆர்., காங், கை தி.மு.க.,வில் இணைத்து விட்டு, முதல்வர் பதவியை மட்டும் பெற்றுக்கொண்டு ஆட்சி அமைத்து, பா.ஜ.,விற்கு பெரிய அதிர்ச்சி கொடுப்பது என்று புதிய திட்டத்துடன் முதல்வர் ரங்கசாமி தயார் நிலையில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள 4ம் தேதி அன்று அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. அன்றே புதுச்சேரி அரசியலிலும் அக்னி நட்சத்திரம் வீசும் என்பது தெரிகிறது.!..?
மேலும்
-
சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்
-
வடமாநில தொழிலாளி நீர்வள்ளூரில் கொலை
-
8.68 லட்சம் பேர் வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளிப்பு :பிற வகை ஆவணங்களை பயன்படுத்திய 1.78 லட்சம் பேர்
-
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
-
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத பட்டாசு ஆலைகள்; விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்
-
ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலைக்கு அனுமதி பெறவில்லை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்