தமிழகத்தில் ஏப்ரல் 30ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி 7 மாவட்டங்களிலும், மே 1ம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 25ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 28, 29ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 30ல்
கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஏப்ரல் 30ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 1ல்
நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மே 1ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும்.
அதிக வெப்பநிலை
ஏப்ரல் 25ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசவுகரியம் ஏற்படுவது மழைக்கா அல்லது மக்களுக்கா .
25 க்கு அப்புறம் அதிக வெயில் அடிக்குமாம்? இப்ப என்ன குளிராகவா இருக்கு
எந்த மாவட்டம் பாதிக்கப்படும்
expect only light rainsமேலும்
-
புதுச்சேரி கடற்கரை துாய்மை பணி; சமூக கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
-
பா.ஜ., கனவு திட்டங்களை தவிடு பொடியாக்க முதல்வர் ரங்கசாமி புதிய திட்டம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் ; துணை ஜனாதிபதி
-
108 பால் குடம் ஊர்வலம்
-
ஓட்டுக்கு வழங்கப்பட்ட பணம்: அ.தி.மு.க., நிர்வாகிகள் 'ஸ்வாகா'
-
தேர்தலையொட்டி நடந்த சோதனை :மது கடத்தியதாக 162 வழக்குகள் பதிவு