சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மாட வீதிகளில் சேதமான நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில், 2014ல், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு அதன்மீது நடைபாதை அமைக்கப்பட்டது.

கட்டுமானப் பணி முறையாக நடைபெறாதால், மாடவீதிகளில் நடைபாதை தடுப்புச்சுவர் கற்கள் சாய்ந்து விழுந்தன. அதேபோல, தடுப்பு சுவர் கற்களை இணைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த துருப்பிடிக்காத உருளை கம்பிகளும் மாயமாகிவிட்டன.

இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement