சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

திருப்போரூர்:ஏகாட்டூர் பகுதியில் முறையான வடிகால்வாய் இல்லாததால், திறந்த வெளியில் கழிவுநீர் வழிந்தோடி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

திருப்போரூர் ஓன்றியம், ஏகாட்டூர் 1வது வார்டு, அம்பேத்கர் தெரு - ஓ.எம்.ஆர்., சாலை சந்திக்கும் பகுதியில் வணிக கடைகள், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உள்ளன. இதன் வழியாக மற்ற பகுதிகளுக்கும் அப்பகுதி மக்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு முறையான வடிகால்வாய் வசதி இல்லாததால், திறந்த வெளியில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

இதனால், அவ்ழியாக செல்லும் மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட பகுதியில், வடிகால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement