ஹயகிரிவர் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
கடலுார்: கடலுார் அடுத்த முள்ளோடையில் உள்ள ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் 22வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பவானி அம்மாள் அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, கவுரவ விருந்தினர் டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுகந்தி ஓனோரின் மெர்சிலின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசினர்.
விழாவில் சாதனை மாணவர்களுக்கும், விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளாக குழு நடனம், யோகா மற்றும் கராத்தே ஆகியவை இடம் பெற்றன.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் லெரு அலெக்சாண்டர் சேவியர் அவர்களின் வழிகாட்டுதலோடு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement