மூதாட்டியிடம் நகை பறித்த கல்லுாரி மாணவியர் கைது
சாயல்குடி: மூதாட்டியிடம் நகை பறித்த, கல்லுாரி மாணவியர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, நரிப்பையூரை சேர்ந்தவர் மாரியம்மாள், 86; தேர்தல் அன்று ஓட்டளித்து விட்டு, வீட்டில் மதியம் 2:00 மணிக்கு தனியாக இருந்தார். அங்கு வந்த இரு இளம்பெண்கள் உட்பட மூவர், அவரிடம் தண்ணீர் கேட்டனர்.
தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற மாரியம்மாளை பின்தொடர்ந்த மூவரும், அவர் முகத்தில் மிளகாய் பொடியை துாவி, அவர் அணிந்திருந்த 7 சவரன் செயின், மோதிரம், கம்மலை பறித்து தப்பினர். சாயல்குடி போலீசார் விசாரித்தனர்.
அதில், துாத்துக்குடியை சேர்ந்த, 17, 18 வயது கல்லுாரி மாணவியர், மற்றும் கர்ணன், 25, ஆகிய மூவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து மூவரையும், போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சூர் பூரம் திருவிழா தொட க்கம் யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் பழனிசாமி கடும் கண்டனம்
-
பாலாஜி, ஆளூர் ஷாநவாசுக்கு வி.சி.க.,வில் முக்கிய பொறுப்பு
-
ஈரோடு அருகே கட்டட பணியில் விபத்து மேஸ்திரி, பெண் தொழிலாளி பரிதாப பலி
-
ஏரியில் மூழ்கி பெண் சாவு
-
திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement