முட்டையில் 'மயோனைஸ்' தடை நீட்டிப்பு

சென்னை: முட்டையிலிருந்து தயாரிக் கப்படும் மயோனைசுக்கு, மேலும் ஓராண்டு தடையை, அரசு நீட்டித்துள்ளது.

முட்டையின் வெள்ளை கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து, மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. இதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இதை சாப்பிடுவோருக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு ஓராண்டு தடை விதித்து, 2025 ஏப்., மாதம் அரசு உத்தர விட்டது. இந்த தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement