லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி

பேரையூர்: எம்.புதுப்பட்டி முருகன் மகன் பாலாஜி 23. கண்ணன் மகன் அரவிந்த்குமார் 21. இவர்கள் இருவரும் அதே பகுதியில் கல் குவாரி கிடங்கில் குளிப்பதற்காக டூவீலரில் எம் புதுப்பட்டி--டி.கல்லுப்பட்டி ரோட்டில் சென்றனர். கன்னம்பட்டி ஊரணி அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ இவர்கள் மீது மோதியது.

இதில் டூவீலரை ஓட்டி வந்த பாலாஜி இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த அரவிந்த்குமார் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஆட்டோவை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஷேக்மைதீன் மீது வி.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement