ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவம்

கோவை: கோவை ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் சார்பில் வரகூர் ஸ்ரீநாராயண தீர்த்ததரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி, ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடக்கிறது.

நேற்று முன் தினம் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி கீதங்கள் வரகூர் ஸ்ரீநாராயண தீர்த்தர் பஜன் மண்டலி நடந்தது. நிறைவு நாளான நேற்று சித்தன் வாழூர் திரிவேதி பிரம்ம ஸ்ரீராஜகோபால சாஸ்திரிகள் குழுவினர் சார்பில், காலை 9 முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் மகோத்சவ நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement