சரணாலயம் வறண்டது; சிறகுகள் திசை மாறின
திருப்பூர்:பல்லுயிர் பெருக்கத்தின் சங்கமமாகத் திகழும் திருப்பூர், நஞ்சராயன் குளம், இன்று மழையின்றித் தாகத்தில் தவிக்கிறது. வெளிநாட்டுப் பறவைகளின் சிறகசைப்பில் சிலிர்த்துக் கிடந்த சரணாலயம், இன்று நீரின்றி வறண்டு கிடப்பது இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாற்றின் வழித்தடமும், அத்திக்கடவு -- அவிநாசி திட்டத்தின் நம்பிக்கையும், வானம் பொழியும் மழையுமே இந்தச் சரணாலயத்தின் உயிர்நாடிகள். ஆனால், மழையோ பொய்த்துப் போனது; வரத்து வாய்க்கால்களோ வறண்டு போனது. எப்போதும் வெளிநாட்டுப் பறவைகளின் குரல் ஒலிக்கும் அந்தப் பகுதியில், இன்று நிசப்தமே நிலவுகிறது. நீர் குறைந்தால் பறவைகளின் வருகை தடைபடும் என்பதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரின் தாகம் தீர்த்த தாய் மடியாக இருந்த மூளிக்குளத்தின் நிலையும் கவலைக்கிடம்தான். ஒரு காலத்தில் ஊரின் நீராதாராமாக இருந்த இந்த நீர்நிலை, இன்று புதர் மண்டி, ஆழம் குறைந்து மழையின்றி வறண்டு காட்சியளிக்கிறது. குளத்தின் ஆழம் குறைந்துவிட்டதால், பெய்யும் மழையைச் சேமிக்கும் திராணியையும் இது இழந்து நிற்கிறது.
நஞ்சராயன் குளம் மற்றும் மூலிக்குளம் ஆகிய இரண்டுமே இன்று துார்வாரப்படாமலும், கழிவுநீரின் ஆக்கிரமிப்பாலும் தன் பொலிவை இழந்துவிட்டன. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால், எஞ்சியிருக்கும் நீரும் நஞ்சாகிக் கொண்டிருக்கிறது. கோடைக்காலம் முடிவதற்குள் போர்க்கால அடிப்படையில் குளங்களைத் துார்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். மழைநீருக்கான வழித்தடங்களைச் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் நாம் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் பேருதவி'' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..
ஜல்ஜீவன் என்னா ஆச்சு ஹைன்?மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்