மயிலம் வழியாக ரங்கநாதபுரத்திற்கு அரசு பஸ்: பொதுமக்கள் கோரிக்கை
மயிலம்: திண்டிவனத்திலிருந்து ரங்கநாதபுரத்திற்கு மயிலம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வானுார் அடுத்த ரங்கநாதபுரத்தில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இங்கிருந்து மாணவர்கள் மேல் படிப்பிற்காக மயிலம்,
திண்டிவனத்திலுள்ள கல்லுாரிகளுக்கு செல்லுகின்றனர்.
திண்டிவனம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வோர் மிகுந்த அவதியடைகின்றனர். இப்பகுதிலுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் தோட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் நிலத்தில் விளைந்த மல்லி,கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகளையும், கீரை, காய்கறிகளை திண்டிவனம் சந்தைக்கு எடுத்து செல்ல பஸ் வசதியில்லாதால் விளை பொருட்களை சந்தையில் விற்க முடியாத நிலை உள்ளது.
எனவே திண்டிவனத்திலிருந்து ரங்கநாதபுரம் கிராமத்திற்கு கூட்டேரிப்பட்டு, மயிலம் கரசானுார் , பரங்கணி வழியாக பஸ் இயக்கினால் கொல்லியங்குணம், மயிலம் கலைக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மாணவர்கள் முருகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என பலரும் பயன் பெருவார்கள். எனவே ரங்கநாதபுரத்திற்கு பஸ் வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்