போலி மருத்துவர் கைது: ஆரம்பாக்கத்தில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், எலக்ட்ரோ ஹோமியோபதி படித்து, சித்தா மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட் அருகே, 'நேச்சுரல் ஹெல்த் கேர் சென்டர்' என்ற பெயரில் இயற்கை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மீது மாவட்ட சுகாதார துறைக்கு புகார்கள் வந்தன.

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுஜி கிருத்திகா தலைமையிலான குழுவினர், ஏப்ரல் 25 ல் இந்த மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது ரபீக், 37, என்பவர், எல்க்ட்ரோ ஹோமியோபதி படித்து, நேயாளிகளுக்கு சித்தா மருத்துகளை பரிந்துரை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது, மருத்துவர் குழுவினர் அளித்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, முகமது ரபீக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement