'காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்' போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பி மோசடி
மும்பை: மும்பையில், நிலுவையில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புக்கான கட்டணத்தை உடனே செலுத்தும்படி போலி 'லிங்க்' அனுப்பி, வாடிக்கையாளர்களை ஏமாற்றி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2.7 கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் பறித்தது தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்துவதால், அங்குள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால், நம் நாடு உட்பட உலக நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் முழுதும் கு ழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை வழங்கும் எம்.ஜி.எல்., எனப்படும் மஹாநகர் காஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து சமீபத்தில் மோசடி கும்பல் கைவரிசை காட்டிஉள்ளது.
அந்த நிறுவனத்தின் பெயரில் அக்கும்பல் போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளது.
அதில், 'நிலுவையில் உள்ள கட்டணத்தை உடனே செலுத்துங்கள்.
'அவ்வாறு செலுத்தவில்லை எனில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்படும்' என குறிப்பிட்டதுடன், கட்டணத்தை செலுத்த ஒரு லிங்க் இணைக்கப்பட்டது.
அந்த லிங்கை அழுத்திய நபர்களின் மொபைல்போன் மூலம் அவர்களின் வங்கி கணக்குகளுக்குள் ஊடுருவி, அவர்களின் பணத்தை சுருட்டி உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2.7 கோடி ரூபாயை இந்த மோசடி கும்பலிடம் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர். இதேபோல், புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களிடமும் அக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
இதுதொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்