'நீட்' நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

புதுடில்லி: இந்தாண்டு நடக்கவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 3ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வை, நாடு முழுதும் 28 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று காலை 10:00 மணிக்கு ஹால் டிக்கெட் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நேற்றிரவே அதை பதிவிறக்கம் செய்யும் வசதி தொடங்கப்பட்டது.

மாணவர்கள் ne et.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Advertisement