அயனாவரத்தில் மே 1ல் இலவச சிலம்ப பயிற்சி

சென்னை: பள்ளி விடுமுறையை பயனுள்ள முறையில் மாற்ற விரும்பும் மாணவ - மாணவியருக்காக, அயனாவரத்தில் கோடை கால இலவச சிலம்ப பயிற்சி, மே 1ல் தொடங்குகிறது.

சுவாமி விவேகானந்தா ஆல் ஸ்போர்ட்ஸ் யூத் சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த இலவச பயிற்சி முகாம், அயனாவரம் சோலையம்மன் பிரதான சாலையில் உள்ள கோவில் மைதானத்தில் மே 1 முதல் 31ம் தேதி வரை நடக்கவுள்ளது.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே, மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கும் இந்த பயிற்சியில் மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 90940 32387 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முகாம் குறித்து தலைமை பயிற்சியாளர் ஏழுமலை கூறுகையில், “தைரியம் மற்றும் உடல் - மனம் ஒருங்கிணைப்பை சிலம்பக்கலை வளர்க்கிறது. பள்ளி விடுமுறையை பயனுள்ள முறையில் மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்,” என்றார்.

Advertisement