நடைபாதைகள் தாரைவார்ப்பு :மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
ஆயிரம் விளக்கு: பாதசாரிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதையை, வியாபாரிகளுக்கு தாரைவார்த்து விட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் மீது, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தின் 18 வார்டுகளிலும் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக, அகலமான நடைபாதை அமைக்கப்பட்டது. அவற்றை ஆக்கிரமித்து பலரும் கடை நடத்தி வருகின்றனர். பெட்டி கடைக்காரர்கள், சிற்றுண்டி கடை நடத்துவோருக்கு ஆதரவாக, மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலை உட்பட பல சாலைகளில், நடைபாதை முழுதும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக அகலமான நடைபாதை அமைத்த மாநகராட்சி, வியாபாரிகளுக்கு சலுகை வழங்கி கடை அமைக்க அனுமதி அளித்துள்ளது.
இதனால் பாதசாரிகள், வேறு வழியின்றி, போக்குவரத்து மிகுந்த சாலையில் உயிரை கையில் பிடித்து நடந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
உயிரிழப்பு ஏற்படும் முன், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்