காரைக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு
காரைக்குடி:காரைக்குடியில் ஆவின் பால் மற்றும் ஆவின் நெய் தட்டுப்பாடால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் 25 சதவீதம், சிவகங்கையில் 75 சதவீதம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. காரைக்குடி ஆவின் மூலம் பால் விற்பனை ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை நடக்கிறது. காரைக்குடியில் 60 ஆவின் பால் பூத்கள் மூலம் பால் வினியோகம் சயெ்யப்படுகிறது. கடந்தசில நாட்களாக ஆவின் பூத்களில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தவிர நெய் விற்பனையும் பல மாதங்களாக கிடைக்கவில்லை. கடந்த 10 நாட்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. குறைந்தபால் வரத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். கோடை காலம் என்பதால் மாடுகளிடமிருந்து பால் வரத்து குறைந்துவிட்டது. நெய் தயாரிக்க பயன்படும் பட்டர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், நெய் உற்பத்தியை குறைத்துவிட்டனர்.
///
மேலும்
-
ஈரான் போர் எதிரொலி; ஓபெக் அமைப்பில் இருந்து வெளியேறும் ஐக்கிய அரபு அமீரகம்
-
திருத்தணி கோவிலில் முடிகாணிக்கை மண்டபம் விரிவுபடுத்த வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிேஷகம்
-
கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா
-
அலையில் கரை சேர்ந்துவிடுவோம் அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை
-
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மொபைல் எடுத்து செல்ல தடை