வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை:காளையார்கோவில் திருநகரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 14 காளைகள், 126 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கின. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 2 பேர் காயமுற்றனர்.

Advertisement