தர்மபுரி மாவட்டத்தில் 9 மையத்தில் 'நீட்' தேர்வு எழுதும் 4,800 மாணவர்கள்
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், 9 தேர்வு மையங்களில், 4,800 மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத உள்ளனர்.
மருத்துவக்கல்வி படிப்பிற்கான, 'நீட்' நுழைவுத்-தேர்வு, நாடு முழுவதும் வரும் மே, 3ம் தேதி நடக்கவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 'ஏ' மற்றும் 'பி' என இரு மையங்களில் தலா, 480 மாணவ, மாண-வியர் 'நீட்' தேர்வு எழுதவுள்ளனர். மேலும், தர்ம-புரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யா-லயா பள்ளி, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலைக்-கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்-பட்டி தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்-களில் தலா, 480 மாணவ, மாணவியரும், கிருஷ்-ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 960 மாணவ, மாணவியரும் என, மாவட்டத்தில் மொத்தம், 9 'நீட்' தேர்வு மையங்களில், 4,800 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி மற்றும் 'நீட்' நுழைவுத்தேர்வு மே, 3ம் தேதி மதியம், 2:00 மணியிலிருந்து மாலை, 5:00 மணி வரை நடக்க-வுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 9 மையங்களில் இத்தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடு-களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில், 'நீட்' தேர்வு எழுத விண்-ணப்பித்த, 4,800 மாணவர்களுக்கு தேர்வு நுழை-வுச்சீட்டு இணைய வழியில் அனுப்பி வைக்கப்-பட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்