துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்கத்தாலியை பறித்த இருவர் கைது

ஒகேனக்கல்; ஒகேனக்கல்லில் துாங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத்தாலி செயினை பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் மேல்பாஷாபேட் பகு-தியை சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவரது மனைவி ஷம்மி, 30. இவர், ஒகேனக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். ஒகேனக்கல் சத்திரம் பகுதியிலே ஷம்மி, தன் கணவருடன் குடியி-ருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல், தன் பணியை முடித்து வீட்டிற்கு சென்ற ஷம்மி, இரவு துாங்க சென்றார். கோடை காலம் என்பதால் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு துாங்கியுள்ளார். அதிகாலை, 2:00 மணியளவில் மர்ம நபர்கள் ஷம்மியின் கழுத்தி-லிருந்த தங்கத்தாலி செயினை திருடிக்கொண்டு தப்பினர். ஷம்மி ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ., தேவராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒகேனக்கல் சத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பாலகிருஷ்ணன், 29, வண்ணாத்திபட்டியை சேர்ந்த விஜய், 25, ஆகிய இருவரும் சேர்ந்து, தாலிச்செயினை திருடியது தெரியவந்தது. இரு-வரையும் கைது செய்த ஒகேனக்கல் போலீசார், அவர்களிமிருந்து, இரண்டரை பவுன் தங்கத்தாலி செயினை மீட்டனர்.

Advertisement