கார் திருட்டு

பாப்பிரெட்டிப்பட்டி; கர்நாடக மாநிலம் பெங்களுரு, அகரா சார்ஜாபூர் பகுதியை சேர்ந்தவர் கிரன்சிவா, 53. இவர், தர்ம-புரி மாவட்டம் பொம்மிடி, மஜித் தெருவிலுள்ள ஸ்டார் திருமண மண்டபம் அருகே அப்துல் கபூர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் கார்-மென்ட்ஸில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த, 4ம் தேதி சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் கடந்த, 24ம் தேதி பொம்மிடிக்கு வந்தார். வீட்டிற்கு வந்த பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் துணிகள் சிதறி கிடந்தன.


முன்பக்க கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கறுப்பு நிற மாருதி சுசுகி ஆல்டோ காரை, மர்ம நபர்கள் திருடி சென்-றது தெரியவந்தது. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement