திருவிழாவில் கோவில் காளை விடுவதில் இருதரப்பு மோதல்

போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாதம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, தாதம்பட்டி, மாவத்துார், மஞ்சமேடு, கொல்லப்பட்டி, விருப்-பம்பட்டி உள்ளிட்ட, 7 கிராமங்களை சேர்ந்த-வர்கள் ஒன்றிணைந்து, பட்டாளம்மன் திருவி-ழாவை நேற்று முன்தினம் முதல், கொண்டாடி வருகின்றனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, 7 கிராமத்தின் சார்பில், மாவத்துாரிலுள்ள பெருமாள் கோவில் வளாகத்தில், எருது விடும் விழா நடப்பதாக இருந்தது. இதில், தாய் கிராம-மான தாதம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் குடும்-பத்தினர், தலைமுறை கடந்து, அவர்களின் காளையை முதலில் விடுவது வழக்கம்.


இந்நிலையில், ஆறுமுகம் பங்காளி உறவுமுறை-யான ஜெகதீசன் குடும்பத்தினர், இந்தாண்டு எங்கள் காளையை முதலில் விட வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆறுமுகம், ஜெகதீசன் குடும்பத்தினரி-டையே, பெருமாள் கோவில் வளாகத்தில், ஏற்-பட்ட மோதலால், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இது, 7 கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் இருந்த போச்சம்பள்ளி போலீசார் சுதாரித்து, மோதலை தடுத்து நிறுத்தி, விசாரித்து வருகின்-றனர்.

Advertisement