செந்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை
கிருஷ்ணகிரி; சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதி-களில் செந்தில் பப்ளிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியும், சிறந்த மதிப்பெண்கள் பெற்றும், செந்தில் குழும பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த சாதனையையொட்டி, 2026ம் ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, செந்தில் கல்வி அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பள்ளி முதன்மை மாணவர்களாக, கவிகுமரன், சஜீந்தனா ஆகியோர், 500க்கு, 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இரு மாண-வர்கள், 497, இரு மாணவர்கள், 496, நான்கு மாண-வர்கள், 495, ஐந்து மாணவர்கள், 493 மதிப்பெண்-களை பெற்றனர்.
கிருஷ்ணகிரி செந்தில் பப்ளிக் பள்ளியில், கோவர்ஷி, அக்ஷயா பிரபு, சண்முக மகிதா, சாஷினி மற்றும் ரெஹனுல்லா, அதிக மதிப்-பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்ந்து, 11 மற்றும், 12ம் வகுப்புகளில் படிக்க, 7.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்பிக்கப்பட்-டனர்.
விழாவில், செந்தில் கல்விக்குழும தலைவர் கந்-தசாமி, துணை தலைவர் மணிமேகலை, செய-லாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்-வாக அதிகாரி கார்த்திகேயன், தலைமை நிர்வாக அதிகாரி மாதையன், முதன்மை முதல்வர் ஸ்ரீனி-வாசன், முதல்வர் வேங்கட அழகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்