ஒரு போன் போதுமே..!
* ஆக்கிரமிப்பு அட்டகாசம் மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
- அஹமது, தெற்குவாசல்.
* வீட்டுமுன் விளம்பரங்கள் மதுரை ஷெனாய் நகர் பகுதியில் வீடுகளுக்கு முன்பு அனுமதி இல்லாமல், விளம்பர பலகைகள் வைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தன், செனாய் நகர்.
* குப்பையால் அவதி திருப்பரங்குன்றம் மேலக்குயில்குடி ரயில்வே கிராசிங் அருகே குப்பை அதிகமாக உள்ளது. விழிப்புணர்வு இல்லாமல், பிளாஸ்டிக்கை எரிப்பதால் இவ்வழியே செல்வோர் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாரிமுத்து, மேலக்குயில்குடி.
* வாகனங்களால் தொல்லை தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் நெரிசலில் தவிக்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.
- நவமணிமாறன், தல்லாகுளம்.
* மூடப்படாத பள்ளம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி 3வது வார்டில் சாக்கடை அடைப்புக்காக தோண்டிய பள்ளம் ஆறுமாதங்களாகியும் மூடப்படவில்லை. இப்பகுதியில் குடியிருப்போர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒன்றிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பவன்யா, வாடிப்பட்டி.
* தெருநாய்கள் தொல்லை மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் தெருநாய்கள் அதிகம் திரிகின்றன. தனியாக செல்வோர் மீது கும்பலாக சேர்ந்து தாக்குவதால் குழந்தைகள், பெரியவர்கள் வெளியே வருவதற்கே பயப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுமதி, சம்மட்டிபுரம்.
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்