தேவகோட்டையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

தேவகோட்டை:தேவகோட்டை நகரில் மெயின்ரோட்டில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. -

தேவகோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுவதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ராம்நகரில் அமைக்கப்பட்டு சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. தற்காலிக பஸ் ஸ்டாண்டில் சில கடைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ராம் நகரில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், வாடியார் வீதி வரை மெயின் ரோட்டில் புதிது புதிதாக கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த ரோட்டில் வாகன நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். சில தனியார் பஸ்கள் தேவகோட்டை நகருக்குள் வந்து செல்வதால், அரசு பஸ் வசூல் பாதிப்பால் சில தினங்களாக அரசு பஸ் உட்பட அனைத்து பஸ்களுமே நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால் எதிர் எதிராக பஸ்கள் அதிக அளவில் வருவதால் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் முன் இருபுறமும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் இந்த ரோட்டில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரோட்டில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய், போலீஸ் துறையினர் முன்வரவில்லை. நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெயின்ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.

///



Advertisement