என். எப் .ஓ., 'ஆக்சிஸ் மேக்ஸ் லைப்'
தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான 'ஆக்சிஸ் மேக்ஸ் லைப்', 'டைவர்சிபைடு ஈக்விட்டி பண்டு-2' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், நிறுவனத்தின் 'யூலிப்' திட்டங்கள் வாயிலாக மட்டுமே கிடைக்கும்.
முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியானது, 'லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப்' பங்குகள் மட்டுமின்றி, நிதி சேவைகள் (24.60%), உட்கட்டமைப்பு (11.20%) மற்றும் மருந்து துறை (6.60%) உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் முதலீடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில், 5 ஆண்டுகள் கட்டாய 'லாக்-இன்' காலம் உண்டு. இது ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுவதால், தனிப்பட்ட பண்டு மேனேஜரின் செயல்பாடுகளை கண்காணிப்பது கடினம்.
மேலும், காப்பீடு மற்றும் முதலீடு இணைந்திருப்பதால் நிர்வாக கட்டணங்கள் லாபத்தை சற்று குறைக்கலாம். பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீடு செய்ய விரும்பும், அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு இத்திட்டம் ஏற்றது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்