ரூ.3 லட்சம் கோடியை கடந்தது 'ஜன் தன் யோஜனா' டிபாசிட்

பிரதமரின் 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் நாடு முழுதும் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் உள்ள மொத்த சேமிப்பு தொகை, 2026 ஏப்ரல் நிலவரப்படி, 3.09 லட்சம் கோடி ரூபாயை கடந்தது என 'பி.எல்.எஸ் இ -சர்வீசஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜன்தன் வங்கி கணக்குகள் 58.06 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில், வங்கி சேமிப்பு தொகை 2.34 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஜன் தன் கணக்கு பயன்படுத்துவதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது.

Tamil News

Advertisement