தேர்தலில் பண மழை: ஜனநாயகமா, பணநாயகமா?
@quote@ சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பணம் வாரி வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகமா, பணநாயகமா. இதை தேர்தல் கமிஷன் தடுக்க இயலாத நிலையில் உள்ளதா? வேட்பாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டால் கூட, தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. இதை தடுக்கும் வலிமை பொருந்தியதாக தேர்தல் கமிஷன் இல்லையா?
வேட்பாளர்கள் போட்டி போட்டு பணத்தை மழையாக பொழிந்துள்ளனர். சாமானியன் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. நடுநிலையோடு தேர்தல் கமிஷன் செயல்பட முடியாத ஒரு நிலை, கவலை அளிக்கிறது. தேர்தலில் பணம் தருவது தடுக்கப்பட வேண்டும்; இல்லையெனில், ஜனநாயகம் படுகொலை செய்யப்படும். தேர்தல் கமிஷனுக்கு என, தனி அலுவலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
- கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சிquote
வாசகர் கருத்து (2)
Seekayyes - ,
27 ஏப்,2026 - 09:44 Report Abuse
என்று T N சேஷன் தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து ரிடையர்ட் ஆனாரோ அன்றே தேர்தல் கமிஷனனின் தனித்துவம் மூடப்பட்டு விட்டதே!! அதற்கு காரணம் அரசியல்வியாதிகளே கிருஷ்ணசாமி சார். 0
0
Reply
shyamnats - tirunelveli,இந்தியா
27 ஏப்,2026 - 08:04 Report Abuse
பணம் கொடுப்பது , வாங்குவது கண்டிப்பாக தடுக்க பட வேண்டும். இதை தேர்தல் கமிஷன் தன செய்ய முடியும்.
அது போல சரி என்று சொல்ல முடியாவிட்டாலும் , சுயேச்சைகளுக்கு வாக்களிப்பதும் தவறு என்றே தோன்றுகிறது. ஏன் என்றால் ஒரு வேளை ஜெயித்தால் கூட பொட்டி வாங்கி கொண்டு ஏதோவொரு கட்சி அல்லது ஆளும் கட்சியில் ஐக்கியமாகி விடுவார். சுயேட்சைகளால் ஆட்சியில் பெரிய மாற்றங்கள் , தங்கள் தொகுதிகளுக்கு வேண்டிய நற்செயல்களை செய்யவும் முடியாது என்பதே உண்மை. 0
0
Reply
மேலும்
-
மார்ச்சில் உச்சம் தொட்டது மின்சார வாகனங்கள் புக்கிங்; மாற்றத்திற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
-
மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு தகுதியில்லை; ஈரான் எம்பி
-
கொடைக்கானலில் தொடர்கிறது முதல்வர் ஓய்வு: ஆர்வமுடன் சந்தித்த மக்கள்
-
இந்தியா- நியூசி வர்த்தக ஒப்பந்தம் முதல் லீக் போட்டியில் டில்லி vs பெங்களூரு வரை: இன்று முக்கிய நிகழ்வு (ஏப்.,27)
-
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறும்; டிரம்ப்
Advertisement
Advertisement