ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறும்; டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தத்தை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அமெரிக்கா அனைத்து ஈரான் துறைமுகங்களையும் முற்றுகையிட்டு உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த சூழலில், நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானில் எண்ணெய் குழாய்களில் இருந்து, கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாததால், ஏதேனும் ஒரு காரணத்தால் அந்த குழாய் மூடப்பட்டால், அந்த குழாய் வெடித்துவிடும்.
அது திடீரென வெடித்து சிதறும் ஒரு நிகழ்வு. அது நடப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். அது வெடித்து சிதறும் போது என்ன நடந்தாலும் சரி, அதை முன்பிருந்ததை போல ஒருபோதும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களிடம் வரலாம், எங்களை அழைக்கலாம். உங்களுக்கு தெரியும், தொலைபேசி வசதி உள்ளது. எங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு வசதிகள் இருக்கின்றன. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
மேலும்
-
போட்டி ஏல முறையில் மின்சார விலை நிர்ணயம் முடிவை திரும்ப பெற அன்புமணி வலியுறுத்தல்
-
ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வில் இருக்கலாமா: தமிழிசை
-
கோவையில் ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை
-
தேர்தலில் பண மழை: ஜனநாயகமா, பணநாயகமா?
-
கவர்னர் மாளிகையில் மீண்டும் ஸ்டாலின் குரல் ஒலிக்கும்: அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை
-
முதல்வருக்கு நிரந்தர ஓய்வு: ஆதவ் அர்ஜுனா ஆரூடம்