ஓட்டு எண்ணும் மையத்தில் சேலம் எஸ்.பி., ஆய்வு
ஆத்துார்; ஆத்துார், கெங்கவல்லி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், சேலம் எஸ்.பி., ஆய்வு செய்தார்.
ஆத்துார் மற்றும் கெங்கவல்லி சட்டசபை தொகு-திகளில், கடந்த, 23ல், ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து ஓட்டு பெட்டிகளுக்கு, தேர்தல் அலுவ-லர்கள் 'சீல்' வைத்து, இரவோடு, இரவாக துப்-பாக்கிய ஏந்திய போலீசார், துணை ராணுவத்தின-ருடன், தலைவாசல், மணிவிழுந்தான் தெற்கில் உள்ள மாருதி, ஸ்ரீமாருதி ஆகிய இரண்டு ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வந்தனர்.மின்னணு ஓட்டு பெட்டிகள் இருக்கும் அறை பகு-திக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்-ளது. சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், நேற்று ஓட்டு பெட்டிகள் உள்ள அறை பகுதியை ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரிடம், எவ்வாறு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கிச் சென்றார்.
மின்சாரம் தாக்கி
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு