ஓட்டு எண்ணிக்கையின் போது முகவர்கள் குறித்து ஆலோசனை

ஓமலுார்; ஓட்டு எண்ணிக்கைக்கு முகவர்கள் நியமனம் குறித்து, தேர்தல் அலுவலர் கோபால-கிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் கூட்டம் நடந்தது.


ஓமலுார் தொகுதியில், 362 ஓட்டுச்சாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணுமிடமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் உள்ள, ஸ்ட்ராங் அறையில் வைக்-கப்பட்டுள்ளது. வரும் மே, 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம்,
26 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது.
ஒரு சுற்றுக்கு, 14 டேபிள் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒரு முகவர் என மொத்தம், 15 பேர், 5 டேபிளில் தபால் ஓட்டுகள் எண்ணப்படவுள்ளது. அதற்கான முகவர்கள் நிய-மிப்பது குறித்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் அலு-வலர் பார்த்தசாரதி உடனிருந்தார்.

Advertisement