அண்ணனை கத்தியால் குத்திய தம்பிக்கு ஐந்து ஆண்டு சிறை


மேட்டூர்; அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


மேட்டூர், சேலம் கேம்ப் சாஸ்திரி நகர், மாதையன் மகன் தனியார் கல்லுாரி பேராசிரியர் காளியப்பன், 29. அவரது தம்பி கட்டட தொழிலாளி மாதேஷ், 28. கடந்த, 10 ஆண்டு களுக்கு முன்பு சகோதரர்களின் பெற்றோர் மாதையன்-பழனியம்மாள் இறந்து விட்டனர்.
திருமணமாகாத காளியப்பன், சகோதரர் மாதேஷ் இருவரும் சாஸ்திரி நகரில் உள்ள தங்கள் வீட்டில் தனித்தனி அறையில் வசித்தனர். மாதேஷ் அவ்வப்போது, காளியப்பனிடம் பெற்றோர் வழங்கிய பொருட்களை கேட்டு தக-ராறு செய்துள்ளார். சகோதரர்கள் சண்டையை அவரது சித்தப்பா பெருமாள் தீர்த்து வைத்து சமா-தானம் செய்துள்ளார்.
கடந்த, 2022 ஆக.,3ல் காலை, 7:00 மணிக்கு வீட்டில் இருந்த காளியப்பனிடம், மாதேஷ் தாயின் கம்மலை தனக்கு தரும்படி கேட்டுள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்-டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், மாதேஷ் வீட்டில் இருந்த கத்தியால் காளியப்பன் இடது வயிறு மற்றும் தொடையில் குத்தியுள்ளார்.
காளியப்பன் கூச்சலிட்டதால், அருகில் இருந்த-வர்கள் ஓடி வர மாதேஷ் அங்கிருந்து தப்பினார். தொடையில் சொருகிய கத்தியுடன், காளியப்பன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். அங்கு கத்தியை அகற்றி, முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டார்.
சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து மாதேசை கைது செய்-தனர். வழக்கு மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்-தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அண்ணனை கொலை செய்ய முயன்ற மாதேஷூக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவணபாபு தீர்ப்பளித்தார்.

Advertisement