மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

சேலம்; மனைவியை கொன்ற கணவனுக்கு, ஆயுள் தண்-டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்-ளது.


சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி, சீனிவாசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா, 36. இவர், தர்மபு-ரியை சேர்ந்த ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2011ல் பிரிந்துவிட்டனர். பின் பெரமனுார், மார்க்-கபந்து தெருவை சேர்ந்த லோகேஷ்ராஜ், 26 என்-பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கார்த்திகா இரண்டா-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், குடிபோதையில் கொடுமைப்படுத்துவதாக கூறி, கணவரை விட்டு பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 2016 மே 1ல், அங்கு வந்த லோகேஷ்ராஜ், கொடுவாளால் கார்த்திகாவை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லோகேஷ்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்-றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், லோகேஷ் ராஜூக்கு ஆயுள் தண்டனை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்-குமார் தீர்ப்பளித்தார்

Advertisement