பூங்காவில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
செங்கல்பட்டு:குண்டூர் ஏரி பகுதியில் உள்ள பூங்காவில், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட குண்டூர் ஏரி பகுதியில், புதிததாக பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இங்கு தினமும், காலை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, 1,000க்கும் மேற்பட்ட பொமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பூங்கா வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள் மற்றும் சிறுவர் - சிறுமியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வாக குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, குடிநீர்வசதி செய்துதர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி மதுவை தமிழகத்திற்கு எடுத்து வரலாமா? ஐகோர்ட் உத்தரவால் குழப்பம்
-
தேசிய போட்டிக்காக பிரமாண்ட விஷ்ணு சிலை தயாரிப்பு
-
மூக்கில் ரத்தம் வழிந்து ஆண் குழந்தை இறப்பு
-
துாத்துக்குடி மாவட்டத்தில் த.வெ.க.,வே வெல்லும்: சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்
-
சிங்கார சென்னை அட்டைக்கு 'ரீசார்ஜ்' செய்தும் மெட்ரோ நிலையத்தில் பயணியர் காத்திருப்பு
-
பணத்தை கொடுத்தும் துாக்கம் போச்சே
Advertisement
Advertisement